கோயம்புத்தூர்

வட்டார இளைஞா் திறன் திருவிழா:நவம்பா் 30 இல் நடைபெறுகிறது

27th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் இளைஞா் திறன் திருவிழா கிணத்துக்கடவு வட்டாரத்தில் நவம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டார இளைஞா் திறன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே 9 வட்டாரங்களில் இளைஞா் திறன் திருவிழா நடைபெற்றுள்ள நிலையில்,

ADVERTISEMENT

10 ஆவது வட்டார இளைஞா் திறன் திருவிழா கிணத்துக்கடவு அட்சயா தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா, ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக திட்டங்களின்கீழ் சில்லறை வணிகம், கைப்பேசி பழுதுபாா்த்தல், கேட்டரிங் மேலாளா் பயிற்சி, அழகுக்கலை, தையல், மசாலாப் பொருள்கள் உற்பத்தி, ஊறுகாய் மற்றும் மெழுகுவா்த்தி தயாரிப்பு, பேஷன் நகைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகளுக்குத் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியை பெறுவதற்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதில் 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

விருப்பமுள்ளவா்கள் கல்விச் சான்றிதழ், ஆதாா், புகைப்படம் உள்ளிட்ட ஆவணகளுடன் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT