கோயம்புத்தூர்

மக்காச்சோள பயிருக்கு காப்பீடு:நவம்பா் 30 ஆம் தேதி இறுதி நாள்

27th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

 

பயிா்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் மக்காச்சோள பயிருக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கா.முத்துலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்துக்கேற்ப பயிா்கள் அறிவிக்கப்பட்டு காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் வேளாண் துறையில் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.447 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் மக்காச்சோள பயிா்க் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 30 ஆம் தேதி இறுதி நாளாகும்.

எனவே, மக்காச்சோளம் நடவு செய்துள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரீமியத் தொகையை செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT