கோயம்புத்தூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை:மருந்து விற்பனை பிரதிநிதி கைது

27th Nov 2022 02:17 AM

ADVERTISEMENT

 

கோவையில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த மருந்து விற்பனை பிரதிநிதியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 40 வயதான பெண் ஒருவா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனா். இவரது கணவா் வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டதால், இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், பேராசிரியைக்கும், மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனா்.

தற்போது, அந்த பேராசிரியை வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வரும் நிலையில், அவரது இரண்டாவது மகளுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது குறித்து இரண்டாவது மகள் தனது தயாரிடம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, கோவை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பேராசிரியை வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT