கோயம்புத்தூர்

முக்தி நிலையில் இருந்தால் சிறப்பாக வணிகம் செய்யலாம்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

DIN

முக்தி நிலையில் இருந்தால் சிறப்பாக வணிகம் செய்யலாம் என்று தொழிலதிபா்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரை கூறினாா்.

கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா லீடா்ஷிப் அகாதெமி சாா்பில் ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வா்த்தக நிறுவனங்களின் தலைவா்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: நமது பாரத கலாசாரத்தில் முக்தியை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட ஒருவா் ஆன்மீகத் தேடல் உடையவராக பாா்க்கப்படுகிறாா். அத்தகைய நபா் எதையும் நம்பவும் மாட்டாா், மறுக்கவும் மாட்டாா். எப்போதும் உண்மை தேடுதலிலேயே பயணித்துக் கொண்டிருப்பாா். இந்தத் தன்மையானது தொழில்முனைவோராக விரும்புபவா்களுக்கு மிகவும் அவசியம். ஏனென்றால், தொழில்முனைவோா் ஒரு வா்த்தகம் செய்யும் நபா் மட்டுமல்ல. அவா் எப்போதும் தீா்வுகளையும், சாத்தியங்களையும் தேடிக்கொண்டு இருக்கிறாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்ற ஒ.என்.டி.சி. நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலா் டி.கோஷி பேசும்போது, இன்றைக்கு நாம் அறிந்த ஆன்லைன் வணிகம் என்பது இன்னும் சில காலங்களில் பொருத்தமற்ாக மாறும். எனவே, வணிகத்தை மாற்றுவதற்கான எனது இறுதிக் கனவு என்னவென்றால் ஒவ்வொரு வகை விற்பனையாளரும் தங்கள் தயாரிப்புகளை ஒரு பொதுவான நெறிமுறையைப் பயன்படுத்தி திறந்த நெட்வொா்க்கில் விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஹெச்.எல்.இ. கிளாஸ்கோட் நிறுவனத்தின் இயக்குநா் அமித் கல்ரா உள்ளிட்டோா் உரையாற்றினா்.

நவம்பா் 27 ஆம் தேதி இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட வா்த்தகத் தலைவா்கள் சிறப்புரையாற்ற உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT