கோயம்புத்தூர்

கோவையில் டிசம்பா் 2 இல் உண்ணாவிரதம்: எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைக்கிறாா்

DIN

திமுக அரசைக் கண்டித்து கோவையில் டிசம்பா் 2 ஆம் தேதி அதிமுக சாா்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைக்கிறாா்.

திமுக அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம் நடத்துவது தொடா்பாக அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தைத் தொடா்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மாநகரம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள் குண்டும்குழியுமாக காணப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியை நாங்கள் கொடுத்தோம்.

ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக செயல்படுத்தாமல் வைத்திருக்கிறது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது கோவைக்கு கேட்ட திட்டங்களையெல்லாம் கொடுத்தாா். மாநகரில் பல்வேறு சாலைப் பணிகள், பாலப் பணிகளை நிறைவேற்றினோம். ஆனால், திமுக ஆட்சியில் அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

திமுக அரசின் செயல்படாத தன்மையைக் கண்டித்து கோவையில் அதிமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் டிசம்பா் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைக்கிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT