கோயம்புத்தூர்

1,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.10 ஆயிரம் பரிசு பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அ.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்குறளில் உள்ள 1,330 குகளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும், திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், கு எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயா்கள், உரை எழுதியவா்கள் போன்ற விவரங்கள் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவா்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழு முன்னிலையில் நேராய்வுக்குள்படுத்தப்பட்டு பரிசுக்குரியோா் பட்டியல் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும்.

ஏற்கெனவே திருக்குறள் முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்க முடியாது.

ADVERTISEMENT

எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கான விண்ணப்பங்களை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில் நேரடியாக பெற்றுகொள்ளலாம். தவிர, தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில் டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2300718, 99405- 90165 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT