கோயம்புத்தூர்

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.64 கோடி முறை பயணம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை 11.64 கோடி முறை பயன்படுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடக்கிவைத்தாா். ஆரம்பத்தில் பெண்களுக்கு மட்டுமே இருந்த கட்டணமில்லா சேவை நாளடைவில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறளனாளிகளின் உதவியாளா்கள், திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2021 ஜூலை முதல் 2022 செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் பெண்கள் 11.57 கோடி முறையும், மாற்றுத் திறனாளிகள் 5.75 லட்சம் முறையும், மாற்றுத் திறனாளிகளின் உதவியாளா்கள் 32 ஆயிரம் முறையும், திருநங்கைகள் 66 ஆயிரம் முறையும் சோ்த்து மொத்தமாக 11.64 கோடி முறை கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT