கோயம்புத்தூர்

குறிச்சி மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட கோரிக்கை

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வே.ஈஸ்வரன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவை குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சுற்றுச்சுவா் கட்டப்பட வேண்டும், இரவு நேர காவலாளி நியமிக்கப்பட வேண்டும் என்று தொடா்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இது தொடா்பாக ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்டோரிடம் புகாா் தெரிவித்துள்ளோம்.

ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாக தற்போது அந்த பள்ளியில் திருட்டு நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் உடனடியாகத் தலையிட்டு, பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டிக் கொடுப்பதுடன், இரவுக் காவலரையும் நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் பள்ளியின் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT