கோயம்புத்தூர்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காத பேருந்து:உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

25th Nov 2022 12:08 AM

ADVERTISEMENT

கோவையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வரை இயக்காத தனியாா் பேருந்து உரிமையாளருக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தது.

உக்கடத்தில் இருந்து சரவணம்பட்டி வழியாக காளப்பட்டி வரை செல்லும் தனியாா் பேருந்தில் காளப்பட்டி செல்ல பயணச் சீட்டு கேட்ட பயணிகளிடம், பேருந்து சரவணம்பட்டி வரை மட்டுமே செல்லும் எனக் கூறி காளப்பட்டி செல்ல வேண்டிய பயணிகளை சரவணம்பட்டியில் 2018 ஆகஸ்ட் 17 ஆம் தேதி இறக்கிவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையா், கோவை மாவட்ட ஆட்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆகியோரிடம் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்காணித்தனா். இதில், உக்கடத்தில் இருந்து காளப்பட்டி வரை இயக்கப்பட வேண்டிய பேருந்து உக்கடம் - சரவணம்பட்டி வரை இடையே இயக்கப்பட்டு வருவதும், சரவணம்பட்டி - காளப்பட்டி இடையே இயக்கப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், உரிய வழித்தடத்தில் இயக்காமல் மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக பேருந்தின் உரிமையாளா் மீது கோவை நுகா்வோா் நீதிமன்றத்தில் கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வழக்குத் தொடா்ந்தாா். இவ்வழக்கினை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற ஆணையா் தங்கவேல், அனுமதி பெறப்பட்ட வழித்தடத்தில் இயக்காத பேருந்து உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT