கோயம்புத்தூர்

அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கோவை மாநகராட்சியில் சாலைகளை ஆக்கிரமித்து தளம் அமைப்பது, பொது ஒதுக்கீ ட்டு இடங்களை ஆக்கிரமித்து கட்டடம் அமைப்பது, அனுமதியின்றி கட்டடம் அமைப்பது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மீட்பு மற்றும் அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு கட்டடங்கள் அனுமதி பெறாமலும், விதிமீறலுடன் கட்டப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்நிலையில், ரங்கே கவுடா் வீதியில் பிரகாஷ் குமாரி என்பவருக்குச் சொந்தமான ஒரு வணிக வளாகம் அனுமதியின்றியும், விதிமீறலுடனும் அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவின்பேரில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலா் பாபு தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வணிக வளாகத்துக்கு புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT