கோயம்புத்தூர்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

19th Nov 2022 12:21 AM

ADVERTISEMENT

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வால்பாறை காவல் ஆய்வாளா் கற்பகம் உத்தரவின்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை இரவு அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டபோது ஒரு குடியிருப்பில் கஞ்சா பதுக்கிவைத்திருந்த மணி (62) என்பவரைப் பிடித்து வால்பாறை காவல் நிலையம் அழைத்து வந்தனா்.

விசாரனையில் அவா், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து மணியை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT