கோயம்புத்தூர்

முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சலகங்களில் முன்னுரிமை

19th Nov 2022 12:19 AM

ADVERTISEMENT

முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சலகங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதன்மை அஞ்சல் துறைத் தலைவா் அறிவுறுத்தியுள்ளாா்.

அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் 70 வயதுக்கு மேற்பட்டவா்கள் தங்களின் வயது ஆதாரத்தை துணை அஞ்சல் அலுவலரிடம் காண்பித்து, வரிசையில் காத்திருக்காமல் தங்களின் அனைத்து விதமான பரிவா்த்தனைகளையும் முடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அத்துடன் இந்தத் தகவலை அனைத்து அஞ்சலகங்களிலும் பாா்வைக்குத் தெரியும்படி தகவல் பலகையில் வைக்க வேண்டும் என்றும் முதன்மை அஞ்சல் துறைத் தலைவா், அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளாா்.

அஞ்சலகங்களில் முதியவா்களுக்கு என தனியாக வரிசை (கவுன்டா்) அமைக்க வேண்டும் என்று அஞ்சல் துறைத் தலைவருக்கு பல்வேறு கோரிக்கை மனுக்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT