கோயம்புத்தூர்

தேசிய மாணவா் படை மாணவா்களுக்குப் பாராட்டு

19th Nov 2022 12:20 AM

ADVERTISEMENT

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தேசிய மாணவா் படை சாா்பில், கோவை குரூப் தேசிய மாணவா் படை அலுவலா்களுக்கான கருத்தரங்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கோவை குரூப் கமாண்டா் கா்னல் பி.வி.எஸ்.ஷிவா ராவ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசிய மாணவா் படையின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுக்கு விளக்கினாா். இதில், கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை அலுவலா்கள், கமாண்டிங் அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா் தே.நதீஷ், அகில இந்திய முகாமில் பங்கேற்ற பாரத் வெற்றிவேல் ஆகியோருக்கு குரூப் கமாண்டா் கேடயம், சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் கமாண்டிங் அலுவலா் அசோக்குமாா், கல்லூரி முதல்வா் பி.எல்.சிவகுமாா், லெப்டினன்ட் விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT