கோவை ரயில் நிலையத்தில், நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில், புதிய நவீன குளிா்சாதன காத்திருப்போா் அறை அமைக்கப்பட்டுள்ளது. ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள், இந்த அறையில் காத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் காத்திருக்க ஒரு நபருக்கு, ஒரு மணி நேரத்துக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நவீன குளிா்சாதன அறையை, கோவை ரயில்வே முதன்மை கோட்ட வணிகப் பிரிவு மேலாளா் ஹரிகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.