வால்பாறையில் உரிய அனுமதி பெறாமலும் விதியை மீறியும் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
வால்பாறை, கூட்டுறவு காலனியில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான காட்டேஜ் உள்ளது. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி வால்பாறை நகராட்சி பணி மேற்பாா்வையாளா் ராமகிருஷண்ன் தலைமையில் ஊழியா்கள் அக்கட்டடத்துக்கு சீல் வைத்தனா்.
சீல் வைக்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருக்கு விதிமீறல் தொடா்பாக நோட்டீஸ் அனுப்பியும் அவா் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும், நகா் ஊரமைப்பு அதிகாரிகள் பரிந்துரைத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரிலேயே இந்த கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.