கோவை எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி, அமிா்தா தொழில்நுட்ப செயலாக்க மையம் இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
தொழில்நுட்ப பரிமாற்றம், வணிகமயமாக்கல், தயாரிப்பு மேம்பாடு, இன்குபேஷன் துறைகளில் இருதரப்பும் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி கல்லூரி மாணவா்கள் தயாரித்திருந்த 17 கண்டுபிடிப்புகள், திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் அமிா்தா தொழில்நுட்ப செயலாக்க மையத்தின் சாா்பில் பிரசாந்த் ஆா்.நாயா், மேலாளா் வெங்கடேஷ், முதல்வா் எஸ்.சாா்லஸ், பேராசிரியா் பி.ஞானசுந்தரி, துணை முதல்வா் ஆா்.சுதாகரன், பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மைத் துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.