கோயம்புத்தூர்

வாா்டு சபைகள் அமைக்க வேண்டும்:கிழக்கு மண்டல கூட்டத்தில் வலியுறுத்தல்

1st Nov 2022 01:29 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் வாா்டுகள்தோறும் வாா்டு சபைகள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி மாநகராட்சியில் வாா்டுகள்தோறும் வாா்டு சபைகள் அமைக்க வேண்டும். குடிநீா், தெருவிளக்கு, பாதாள சாக்கடை பணிகள், சாலை வசதிகள், வாா்டு வளா்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாா்டுகளில் நிறைவுறாத வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என் மாமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையா் முத்துராமலிங்கம், பொது கணக்கு குழுத் தலைவா் தீபா தளபதி இளங்கோ, உதவி நகரமைப்பு அலுவலா் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினா்கள் நவீன்குமாா், எம்.கோவிந்தராஜ், பெ.சரஸ்வதி, ர.பூபதி, மே.தூ.மோகன், எஸ்.பாக்கியம், த.தா்மராஜ், ப.சாந்தாமணி, எம்.சுமித்ரா, மு.சிவா, கீதா சேரலாதன், ஆதி மகேஸ்வரி, உதவிப் பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT