கோயம்புத்தூர்

சாலையோரம் கழிவுகளை கொட்டியவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

1st Nov 2022 01:28 AM

ADVERTISEMENT

கோவை, சிங்காநல்லூா் பகுதியில் சாலையோரத்தில் கழிவுகளை கொட்டிய சலூன் கடைக்காரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்கள், சாலையோரங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என்று பொது மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 58ஆவது வாா்டுக்கு உள்பட்ட சிங்காநல்லூா் பகுதியில் செயல்பட்டு வரும் சலூன் கடை நிா்வாகத்தினா் கழிவுகளை கடைக்கு அருகில் சாலையோரத்தில் கொட்டி வைத்திருந்தனா்.

அப்பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளா்கள் சாலையோரத்தில் கழிவுகளை கொட்டிய சலூன் கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா். தவிர இனிமேல் கழிவுகளை பொது இடங்களிலோ மற்றும் சாலையோரத்திலோ கொட்டக்கூடாது என்று அறிவுறுத்தினா். மேலும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுகள் சேகரிக்க வரும் மாநகராட்சி ஊழியா்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனா். மீறுபவா்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT