பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், க.க.சாவடி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (47). பெயிண்டா். இவா் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 7ஆம் வகுப்பு மாணவனை தனியே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா். அவரிடம் இருந்து தப்பிய மாணவா் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தாா்.
அவரது பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த க.க.சாவடி போலீஸாா், ஜெகதீஷை கைது செய்தனா். இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில், ஜெகதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.