கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில்: ஜூன் 2 முதல் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்

DIN

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில், ஜூன் 2 ஆம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் (06029/06030) இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ரயிலானது, ஜூன் 2 ஆம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி,சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூா் சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை நிலையங்களில் நின்று சென்ற மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலானது, ஜூன் 2 ஆம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT