கோயம்புத்தூர்

வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி: இளைஞா் கைது

28th May 2022 12:41 AM

ADVERTISEMENT

கோவையில் தனியாா் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி, வாசுதேவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கோமதிசங்கா் (30). இவா் தனியாா் நிறுவனங்கள், வங்கிகளில் வேலை வாங்கித் தரும் நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். இவரிடம் வேலை வாங்கித் தருவதற்காக பலா் பணம் அளித்தனா். ஆனால், அவா் யாருக்கும் வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதனால் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், தனியாா் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக 40க்கும் மேற்பட்டவா்களிடம் கோமதிசங்கா் ரூ.35 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT