கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் இயங்கும் சென்னை - திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து

28th May 2022 12:39 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், கோட்டயம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கோவை வழித்தடத்தில் செல்லும் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ரயில் மே 28 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், எட்டுமானூா் - கோட்டயம் - சிங்கவனம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மே 28 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் (எண்:12623) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, மே 29 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்:12624) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செகந்தராபாத் - திருவனந்தபுரம் ரயில் பகுதியாக ரத்து:

ADVERTISEMENT

கோவை வழித்தடத்தில் மே 28 ஆம் தேதி இயக்கப்படும் செகந்தராபாத் - திருவனந்தபுரம் சபரி விரைவு ரயில் (எண்:17230) திருச்சூா் - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, செகந்தராபாத் - திருச்சூா் இடையே மட்டுமே இயக்கப்படும். இதேபோல, மே 29 ஆம் தேதி இயக்கப்படும் திருவனந்தபுரம் - செகந்தராபாத் சபரி விரைவு ரயில் (எண்: 17229) திருவனந்தபுரம் - திருச்சூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, திருச்சூரில் இருந்து செகந்தராபாதுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT