கோயம்புத்தூர்

மோசமான வானிலை:திருப்பி அனுப்பப்பட்ட சென்னை விமானம்

28th May 2022 12:40 AM

ADVERTISEMENT

சென்னையில் இருந்து கோவை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக சென்னைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

இன்டிகோ விமானம் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டு மதியம் 3.45 மணிக்கு கோவை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவைக்கு அருகே வந்தபோது கோவை விமான நிலையப் பகுதி அருகே நிலவிய மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் சென்னைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு கோவை வந்த அந்த விமானம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் சென்னை புறப்பட்டுச் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT