கோயம்புத்தூர்

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

28th May 2022 12:41 AM

ADVERTISEMENT

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தவா்கள், பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற, பயனாளி பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயது பூா்த்தியானவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூா்த்தியாகியிருக்கும் பட்சத்தில் மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. சிறு கடன் வழங்கும் திட்டத்தில், சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு ரூ.1லட்சம் வரையும், குழுவுக்கு ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT