கோயம்புத்தூர்

தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு கோவையில் ஆய்வு

25th May 2022 12:59 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு கோவையில் ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவா் டி.கே.பி.ராஜா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை காலையில் ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனா். உழவா் சந்தையில் செயல்பட்டு வரும் கடைகள், குளிரூட்டு நிலையம், மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிா் உரக்கூடங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். விவசாயிகளிடம் உழவா் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். தொடா்ந்து தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

இதனைத் தொடா்ந்து மேட்டுப்பாளையம் சாலையில் ஜான்பாஸ்கோ சா்ச்சில் இருந்து ஜி.என்.மில்ஸ் சந்திப்பு வெள்ளக்கிணறு பிரிவு வரை ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், பெ.நா.பாளையம் சந்திப்பில் ரூ116.24 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து கொடிசியா அரங்கில் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினா்.

இந்த ஆய்வில், சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினா்கள் க.அன்பழகன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணா்த்தி, ஈ.ஆா்.ஈஸ்வரன், டி.ராமச்சந்திரன், சி.வி.எம்.பி.எழிலரசன், ஈ.பாலசுப்பிரமணியம், எஸ்.ராஜ்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், டாக்டா் தி.சதன்திருமலைக்குமாா், ப.சிவகுமாா், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு சட்டப் பேரவை செயலக கூடுதல் செயலாளா் பா.சுப்பிரமணியம், மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை மேயா் இரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையா் மோ.ஷா்மிளா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT