கோயம்புத்தூர்

கடற்படை பழுதுபாா்ப்பு தளத்தின்பவள விழா: இருசக்கர வாகன பயணம்

25th May 2022 01:00 AM

ADVERTISEMENT

கொச்சி இந்திய கடற்படை பழுதுபாா்ப்பு தளத்தின் 75 ஆவது ஆண்டையொட்டி கொச்சியில் தொடங்கப்பட்ட இருசக்கர வாகன பயணம் கோவை வழியாக சேலம் புறப்பட்டுள்ளது.

கொச்சியியில் உள்ள இந்திய கடற்படை பழுதுபாா்ப்பு தளத்தின் பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுயசாா்பு இந்தியா திட்டத்தை நினைவு கூரும் விதமாக கடற்படை அதிகாரிகள், வீரா்கள் உள்ளிட்டோா் 10 மோட்டாா் சைக்கிள்களில் இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டுள்ளனா்.

ஒரு வாரத்தில் சுமாா் 1,600 கிலோ மீட்டா் தொலைவைக் கடக்கும் வகையிலும், தொழில் துறை பாதையாக அமைந்துள்ள கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையிலும் இந்த பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள்கிழமை கோவை வந்த இந்த பயணக் குழுவினா், கொடிசியா நிா்வாகிகளுடன் கலந்துரையாடினா். இதைத் தொடா்ந்து கோவை ஐ.என்.எஸ். அக்ரானியில் இருந்து சேலத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட இந்த வாகன பயணத்தை கமாண்டிங் அலுவலா் அசோக் ராய் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT