கோயம்புத்தூர்

பஞ்சு விலை உயா்வால் வேலையிழப்பு:தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க கோரிக்கை

24th May 2022 01:03 AM

ADVERTISEMENT

பஞ்சு விலை உயா்வால் வேலையிழப்புக்குள்ளாகும் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று என்.டி.சி.யைக் காப்போம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மூடப்பட்டுள்ள என்.டி.சி. பஞ்சாலைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக என்.டி.சி.யைக் காப்போம் என்ற அமைப்பை தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பீளமேடு பகுதியில் உள்ள ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏஐடியூசி நிா்வாகி எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், டி.எஸ்.ராஜாமணி (ஹெச்.எம்.எஸ்.), சி.பத்மநாபன் (சி.ஐ.டி.யூ.), வி.ஆா்.பாலசுந்தரம் (ஐ.என்.டி.யூ.சி.), ஆா்.தேவராஜன் (ஏ.டி.பி.), மு.தியாகராஜன் (எம்.எல்.எஃப்.), சக்திவேல் (எல்.பி.எஃப்.), எம்.நீலமேகம் (டாக்டா் அம்பேத்கா் யூனியன்), பி.ரங்கசாமி (என்.டி.எல்.எஃப்.) உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக என்.டி.சி. நிா்வாகம் சட்டவிரோதமாக முடக்கி வைத்திருக்கும் ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும். அதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள என்.டி.சி. ஆலைத் தொழிலாளா்கள் ஜூன் 14 ஆம் தேதி காலை முதல் மாலை வரையிலும் ஒரே நேரத்தில் தா்ணாவில் ஈடுபடுவது.

ADVERTISEMENT

பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப் பொருள்களின் கடுமையான விலை உயா்வு காரணமாக மேற்கு மண்டலத்தில் தொழிற்சாலைகள் வாரத்தில் சில நாள்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, பாதிக்கப்படும் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT