கோயம்புத்தூர்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிய பிறகேஉபரி நீரை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்முதல்வரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

DIN

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றிய பிறகே, பிஏபி உபரி நீரை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அண்மையில் கோவை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், அதன் தலைவா் சு.பழனிசாமி, நிா்வாகிகள் பெரியசாமி, கிருஷ்ணசாமி, மணிகண்டன் சண்முகம் ஆகியோா் மனு அளித்தனா்.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீா் எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பிஏபி திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவை, திருப்பூா் விவசாயிகளுக்கே உரிய காலத்தில், தேவையான நீா் கிடைப்பதில்லை. எனவே பிஏபி திட்டத்தில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றிய பிறகே, பிஏபி உபரி நீரை வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல திட்டமிட வேண்டும்.

நொய்யல் நதியை சீரமைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நொய்யல் நதியின் நீளம், அகலத்தைக் கண்டறிந்து கல் நட்டு இடத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை, சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

அதேபோல் வன விலங்குகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காண வேண்டும். விதைச்சான்று அலுவலகத்தை கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தியதாக சு.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT