கோயம்புத்தூர்

சிறைக் கைதி மருத்துவமனையில் சாவு

23rd May 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (37). இவா் ஈமு கோழி பண்ணை நடத்தி வந்தாா்.

இதில், பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கி மோசடி செய்ததாக 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவா்,

ADVERTISEMENT

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், சுப்பிரமணியத்துக்கு சில நாள்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுப்பிரமணி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT