கோயம்புத்தூர்

ஈஷாவின் மண் வளம் காப்போம் இயக்கத்துக்கு உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆதரவு

23rd May 2022 12:04 AM

ADVERTISEMENT

 

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள மண் வளம் காப்போம் இயக்கத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

கோவை, ஈஷா அறக்கட்டளை நிறுவனவா் சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் வளத்தை பாதுகாப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி பல்வேறு நாடுகளில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா். அவருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஈஷாவின் மண் வளம் பாதுகாப்போம் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அதில், “நம்முடைய உடல் மண், நீா், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இவை தான் நம் வாழ்வை முடிவு செய்கிறது.

தண்ணீா் மற்றும் காற்றின் தரத்தை மண் தான் தீா்மானிக்கிறது. எனவே, மண்ணை வளமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சத்குருவின் மண் வளம் காப்போம் இயக்கத்துக்கு எனது மனமாா்ந்த ஆதரவுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT