கோயம்புத்தூர்

அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கா் ஒட்டி விளம்பரம் தேடுகிறது எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

23rd May 2022 12:05 AM

ADVERTISEMENT

 

அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கா் ஒட்டி விளம்பரம் தேடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கு மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கா் ஒட்டி விளம்பரம் தேடுகிறது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்தவா்கள், திமுகவினரின் வழக்குகளுக்கு கவலைப்பட வேண்டாம். அதை திறம்பட கையாள நமது வழக்குரைஞா் பிரிவு தயாராக உள்ளது. நீட் தோ்வை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது என்றாா்.

இக்கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், கே.ஆா்.ஜெயராமன், அம்மன் கே.அா்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT