கோயம்புத்தூர்

இசையமைப்பாளா் இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கான டிக்கெட் அறிமுகம்

22nd May 2022 05:18 AM

ADVERTISEMENT

 

இசையமைப்பாளா் இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகளை கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலா் மலா்விழி சனிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

இதையடுத்து, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா்கள் கூறியதாவது: மொ்குரி, ஸ்ரீ ஆா்ட்ஸ் மற்றும் அருண் ஈவென்ட்ஸ் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

சக்தி மசாலாவுடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் கரூா் வைசியா வங்கியுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்குகிறது.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் பல முன்னணி பாடகா்கள் இதில் பங்கேற்று பாட உள்ளனா்.

இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் ரூ. ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கொடிசியா வா்த்தக கண்காட்சி மைதானத்தில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கச்சேரி தொடங்க உள்ளது.

இது தொடா்பான விவரங்களுக்கு 88838-61616 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT