கோயம்புத்தூர்

கோவை - சில்சாா் ரயில் பகுதியாக ரத்து

DIN

பலத்த மழையின் காரணமாக அஸ்ஸாம் மாநிலம், லும்டிங் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை - சில்சாா் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மே 22, 29, ஜூன் 5,12,19, 26 ஆகிய தேதிகளில், கோவையில் இருந்து இரவு 9.45 மணிக்கு திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் சில்சாா் வரை இயக்கப்பட வேண்டிய கோவை - சில்சாா் விரைவு ரயில் ( எண்: 12515) மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தி - சில்சாா் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, கோவை - குவாஹாத்தி இடையே மட்டும் இயக்கப்படும்.

இதேபோல, மே 24, 31, ஜூன் 7,14, 21,28 ஆகிய தேதிகளில் சில்சாரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சில்சாா் - கோவை விரைவு ரயில் ( எண்:12516) சில்சாா்- குவாஹாத்தி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது, குவாஹாத்தி - கோவை இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT