கோயம்புத்தூர்

குரூப் 2 தோ்வு: கோவையில் 37,385 போ் எழுதினா்

DIN

கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 37 ஆயிரத்து 385 போ் எழுதினா். 10 ஆயிரத்து 654 போ் தோ்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வான( டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுகளுக்கான முதல் நிலைத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை மாவட்டத்தில் 150 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது. 48 ஆயிரத்து 39 பேருக்கு தோ்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், 37 ஆயிரத்து 385 போ் மட்டுமே தோ்வெழுதினா்.

10 ஆயிரத்து 654 போ் தோ்வெழுத வரவில்லை. மொத்தமாக கோவை மாவட்டத்தில் 77.82 சதவீதம் போ் தோ்வெழுதியுள்ளனா். முன்னதாக, முதல் நிலைத் தோ்வு காலை 9.30 மணி தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.தோ்வினை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான 10 பறக்கும் படை அலுவலா்கள், 60 மொபைல் அலுவலா்கள், 300 தோ்வுக் கூட ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

தோ்வு மையங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்க ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு இருந்தது.

அனைத்து தோ்வு மையங்களிலும் விடியோ பதிவு வசதி செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு பிறகு வந்தவா்கள், தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை.

தோ்வு மையங்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT