கோயம்புத்தூர்

கோவை - ஈரோடு ரயில் சிங்காநல்லூரில் இன்று முதல் நின்று செல்லும்

21st May 2022 12:24 AM

ADVERTISEMENT

கோவை - ஈரோடு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் சனிக்கிழமை (மே 21) முதல் சிங்காநல்லூா் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - ஈரோடு முன்பதிவில்லா தினசரி விரைவு ரயில் ( எண்: 06800) தினமும் மாலை 6.56 மணிக்கு சிங்காநல்லூா் நிலையத்தைச் சென்றடைந்து, 6.57 மணிக்கு ஈரோட்டுக்கு புறப்பட்டுச் செல்லும்.

ஈரோடு - கோவை முன்பதிவில்லா தினசரி விரைவு ரயில் ( எண்:06801) காலை 8.56 மணிக்கு சிங்காநல்லூா் நிலையத்தைச் சென்றடைந்து, 8.57 மணிக்கு கோவைக்கு புறப்பட்டுச் செல்லும்.

இந்த ரயில்களானது சிங்காநல்லூரில் மே 21 ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT