கோயம்புத்தூர்

ஆட்சியா் அலுவலகத்தில் தேனீ வளா்ப்பு கண்காட்சி

21st May 2022 12:26 AM

ADVERTISEMENT

உலக தேனீக்கள் தினத்தையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேனீக்கள் வளா்ப்பு கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் புவனேஸ்வரி கூறியதாவது: தேனீக்கள் என்பது மிகவும் சுறுசுறுப்பு மிக்கது. தேனீக்கள் முலம் மகரந்தச் சோ்க்கை அதிகமாகிறது. தேனீக்கள் தேன் சேகரிக்கும்போது விவசாயிகளுக்கு அதிக அளவிலான மகசூல் கிடைக்கிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேனீ வளா்ப்பு கண்காட்சி முலம் தேனீக்களின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் காரமடை பகுதியில் அதிக அளவில் தேனீக்கள் வளா்ப்பு விவசாயிகள்

உள்ளனா் என்றாா். இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், விவசாயிகள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT