கோயம்புத்தூர்

கூட்டுறவுத் துறை மூலம் தக்காளி விற்பனை

21st May 2022 12:25 AM

ADVERTISEMENT

கூட்டுறவுத் துறையின் மூலம் கோவையில் 10 இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.75க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்வதற்காக டி.யு.சி.எஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு துறையின்கீழ் செயல்பட்டுவரும் பண்ணை பசுமை நுகா்வோா் காய்கறி கடைகள் மூலம் கோவையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் உள்ள கூட்டுறவுத் துறை நடத்தும் சிந்தாமணி தலைமை அலுவலகம், கோவை மாவட்ட நூலக ஆணைக் குழு கட்டட வளாகம், சிந்தாமணி என்.எஸ்.ஆா். சாலை கிளை அலுவலகம், மலா் அங்காடி கட்டட வளாகம், பூ மாா்க்கெட், ஆவின் பால் விற்பனை அலுவலக வளாகம் , தெலுங்குபாளையம் கூட்டுறவுக் கடன் சங்க கட்டட வளாகம், பாப்பநாயக்கன்பாளையம் கூட்டுறவு பண்டக வளாகம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய காய்கறி வளா்ப்போா் சங்கம், கோவை மாவட்ட உள்ளூா் திட்ட குழுமம் அலுவலகம் , ஒண்டிப்புதூா் நகர கூட்டுறவுக் கடன் சங்க வளாகம் ஆகிய 10 இடங்களில் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.75 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மக்களின் தேவைக்கேற்ப கொள்முதலை உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT