கோயம்புத்தூர்

மாவட்டத்தில் ஓராண்டில் 5.83 கோடி மகளிா் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம்ஆட்சியா் தகவல்

21st May 2022 12:25 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 5.83 கோடி மகளிா் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 235 மனுக்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 13 ஆயிரத்து 601 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 15 லட்சத்து 33 ஆயிரத்து 588 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் 659 போ் பயனடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

புதிய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் 3,448 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் 6,572 பெண் தன்னாா்வலா்கள் மூலம் 96 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவியா் கல்வியறிவு பெற்று வருகின்றனா்.

புதிய வேளாண் காடு வளா்ப்புத் திட்டத்தின் மூலம் ரூ.51.54 லட்சம் மதிப்பீட்டில் 3,430 விவசாயிகளுக்கு 34 ஆயிரத்து 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. நகா்ப்புற வீடுகளில் காய்கறி உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் மூலம் 20 ஆயிரத்து 128 பயனாளிகளுக்கு காய்கறித் தோட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் 2,080 விவசாயிகளுக்கு ரூ.46.35 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மகளிா்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில்

5 கோடியே 83 லட்சத்து 3 ஆயிரத்து 802 மகளிா்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் சென்றுள்ளனா்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தின்கீழ் 47 ஆயிரத்து 567 பயனாளிகளுக்கு ரூ.199.53 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் சபை எனும் பொதுமக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்ச்சி மூலமாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 680 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அம்மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 77 ஆயிரத்து 297 மனுக்களுக்குத் தீா்வுகாணப்பட்டு, அவா்களுக்கான அரசு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 40 ஆயிரத்து 383 மனுக்கள் மேல்நடவடிக்கைக்காக பரிசீலனையில் உள்ளன.

கோவை மாவட்டத்தில் 99.6 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 90 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT