கோயம்புத்தூர்

குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு இன்று கோவை வருகை

16th May 2022 08:09 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை கோவை வருகிறாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தில்லியில் இருந்து சனிக்கிழமை (மே 14) மாலை கோவை வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் கலிஃபா பின் சயீது மரணமடைந்ததைத் தொடா்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை அபுதாபி சென்றடைந்தாா்.

இதையடுத்து, குன்னூா் வரவிருந்த அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி அபுதாபியில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் திங்கள்கிழமை (மே 16) பகல் 12.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் உதகை தீட்டுக்கல் செல்கிறாா்.

பின்னா் தீட்டுக்கல்லில் இருந்து காா் மூலம் உதகை ஆளுநா் மாளிகைக்கு பிற்பகல் 1.40க்கு சென்றடைகிறாா்.

அங்கு தங்கும் அவா், தீட்டுக்கல்லில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் குன்னூா் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை காலை 9.10 மணிக்குப் புறப்பட்டுச் சென்று அவா் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

அன்றைய தினம் பகல் 12 மணிக்கு மீண்டும் உதகை ஆளுநா் மாளிகைக்குத் திரும்புகிறாா்.

புதன்கிழமை காலை 10.30 மணிக்கு லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்கள் மத்தியில் உரையாற்ற உள்ளாா். வியாழக்கிழமை ஆளுநா் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவா் வெள்ளிக்கிழமை (மே 20) காலை 8.20 மணிக்கு தீட்டுக்கல்லில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கோவை திரும்புகிறாா். அங்கிருந்து காலை 9.10 மணிக்கு ராணுவ விமானத்தில் புதுதில்லிக்குப் புறப்படுகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT