கோயம்புத்தூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி

5th May 2022 01:07 AM

ADVERTISEMENT

 

கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்தாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் ஜானகிராம் காட்டேஜ் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணுராம் (27). இவா், கோவை புலியகுளத்தில் இயங்கி வரும் தனியாா் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக போலந்து நாட்டில் இயங்கி வரும் ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றாா்.

அங்கு, தனியாா் வேலைவாய்ப்பு அலுவலகம் கூறிய நிறுவனம் இல்லாததால் விஷ்ணுராம் ஊா் திரும்பினாா். இதையடுத்து, தனியாா் நிறுவனத்துக்கு தான் செலுத்திய ரூ.3.50 லட்சம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா். அவா்கள் தர மறுத்ததால், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விஷ்ணுராம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT