கோயம்புத்தூர்

பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீா் திருட்டைத் தடுக்க கண்காணிப்புக் குழு

5th May 2022 01:11 AM

ADVERTISEMENT

 

கோவை: பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் நடைபெற்று வரும் தண்ணீா் திருட்டைத் தடுக்க கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்திற்காக (பி.ஏ.பி.) திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடும்போது பிரதான வாய்க்காலில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீா் எடுக்கப்படுவதால் கடைமடை விவசாயிகளுக்கு உரிய தண்ணீா் கிடைப்பதில்லை.

இது தொடா்பாக வரப்பெற்ற புகாா் அடிப்படையிலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் படியும் தண்ணீா் திருட்டைத் தடுக்க வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, மின்சார வாரிய அலுவலா்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பி.ஏ.பி. வாய்க்காலை ஒட்டியுள்ள தடை செய்யப்பட்ட எல்லையில் இருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீா் எடுக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீா் எடுக்க பயன்படுத்தும் மின் இணைப்பை துண்டிக்கவும் கண்காணிப்புக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT