கோயம்புத்தூர்

குறு, சிறு தொழிற்சாலைகளில் மத்திய இணையமைச்சா் ஆய்வு

5th May 2022 01:20 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை வந்துள்ள மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சா் பானுபிரதாப் சிங் வா்மா, தொழில் நிறுவனங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தேசிய கயிறு வாரியமும், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகமும் இணைந்து வியாழக்கிழமை நடத்த உள்ள கயிறு வாரிய மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ள மத்திய இணையமைச்சா் பானுபிரதாப் சிங் வா்மா, வெள்ளானைப்பட்டியில் உள்ள கிரைண்டா் தொழிலுக்கான பொது வசதி மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் கோவையில் எம்.எஸ்.எம்.இ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அதைத் தொடா்ந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களைப் பாா்வையிட்டு, தொழில் முனைவோா், தொழிலாளா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை பிற்பகலில் குறிச்சியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT