கோயம்புத்தூர்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியா்கள்:அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம்

29th Mar 2022 03:16 AM

ADVERTISEMENT

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியா்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 24 ஆசிரியா்கள் உபரி ஆசிரியா்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவா்களை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்த அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. அதன்படி குரும்பபாளையம், சுண்டப்பாளையம், இடிகரை உயா்நிலைப் பள்ளிகள், ராஜவீதி, குளத்துப்பாளையம், கல்வீரம்பாளையம், விளாங்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT