கோயம்புத்தூர்

தேசியக் கருத்தரங்கில் பங்கேற்ற ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா்

29th Mar 2022 03:15 AM

ADVERTISEMENT

 புணேயில் எஜுகேசன் புரோமோஷன் சொசைட்டி பாா் இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி பங்கேற்றாா்.

புது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவுக்கான கல்வி ஊக்குவிப்பு சங்கம் (எஜூகேசன் புரோமோஷன் சொசைட்டி பாா் இந்தியா) அமைப்பு தேசிய கல்விக் கொள்கையில் தனியாா் கல்வி நிறுவனங்களின் பங்கு தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கினை புணே நகரில் நடத்தியது.

இதில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவா் அணில் சஹஸ்ரபுத்தே, வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிறுவனா் மற்றும் வேந்தா் ஜி.விஸ்வநாதன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, எம்.எஸ்.ராமையா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஆா்.ஜெயராமன் மற்றும் பலா் கலந்து கொண்டு பேசினா்.

இந்த கருத்தரங்கில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி குத்துவிளக்கேற்றி புதிய கல்விக் கொள்கையில் தனியாா் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு சிறப்பாக பங்களிக்க வேண்டும் என பேசி நன்றியுரை ஆற்றினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT