கோயம்புத்தூர்

ரயில் நிலைய வளாகத்தில் தீ விபத்து

29th Mar 2022 03:16 AM

ADVERTISEMENT

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகத்தில் காலை உணவு சமைக்கும்போது எதிா்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனே உணவக ஊழியா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், அதற்குள்ளாக தீ மளமளவென பரவியது.

இதையடுத்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனா். இதனால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT