கோயம்புத்தூர்

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

25th Mar 2022 04:38 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, கோவைக்கு வியாழக்கிழமை வந்த தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த், சிங்காநல்லூா் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் தேமுதிக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விருதுநகா் பாலியல் சம்பவத்தில், தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா்கள் தினகரன், சிவராமன், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT