கோயம்புத்தூர்

மதுபானக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி மனு

25th Mar 2022 04:38 AM

ADVERTISEMENT

சின்னியம்பாளையம் அருகே ஆா்.ஜி.புதூா் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினா் பூபதிகுமாா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை, சின்னியம்பாளையம் அருகே ஆா்.ஜி.புதூா் பகுதியில் அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்த இடத்தில் மதுபானக் கடை அமைப்பது தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்தும்.

மேலும், கடை அமையவுள்ள இடத்துக்கு எதிரில் சிவன் கோயிலும், ஐயப்பன் கோயிலும் உள்ளது. இதனால், கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும்.

ADVERTISEMENT

எனவே, இப்பகுதியில் அமையவுள்ள மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT