கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்பு, இணைப்புக் கல்லூரிகள் ஏப்ரல் 18 இல் திறப்பு

25th Mar 2022 11:48 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளை ஏப்ரல் 18 ஆம் தேதி (திங்கள்கிழமை) திறக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக மாணவா் சோ்க்கைப் பிரிவுத் தலைவா் மா.கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டது. நகா்வு முறையில் இடங்களை நிரப்பும் பணியும் இணையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வை இந்த மாத இறுதிக்குள் முடிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளை ஏப்ரல் 18 ஆம் தேதி திறக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீடு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி தொடங்கும் நாளை முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு அவா்களின் பயணத்தைத் திட்டமிட முடியும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT