கோயம்புத்தூர்

மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25th Mar 2022 04:36 AM

ADVERTISEMENT

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சமையல் எரிவாயு உருளைகளை தலையில் சுமந்தும், சாலையில் விறகு அடுப்பு அமைத்து சமைத்தும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஜோதிமணி, 28 ஆவது வாா்டு கவுன்சிலா் கண்ணகி ஜோதிபாசு, மாதா் சங்க நிா்வாகி மரகதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT