கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

25th Mar 2022 11:44 PM

ADVERTISEMENT

கோவை மத்திய சிறையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

சிறையில் உள்ள கைதிகள் தங்களது உறவினா்களுடன் பேச கைப்பேசி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கென தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கைதிகள் சிலா் விதிகளை மீறி சிறைக்குள் கைப்பேசிகளை எடுத்து வந்து பயன்படுத்துகின்றனா். மேலும், புகையிலைப் பொருள்களையும் மறைத்து வைத்து பயன்படுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதைத் தடுப்பதற்கு போலீஸாா் அடிக்கடி சோதனை செய்வது வழக்கம். இதன்படி உதவி ஆணையா் வின்சென்ட் தலைமையிலான போலீஸாா் கோவை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சோதனையைத் தொடங்கினா்.

ஒரு மணி நேரமாக நடைபெற்ற இச்சோதனையில் கைப்பேசி, புகையிலைப் பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், விதிகளுக்குள்பட்டு இருக்க வேண்டும் என கைதிகளை போலீஸாா் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT